Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர் 

by Editor

சினிமா
அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர் 

 

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அதன் பின்னர் த்ரில் கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் தொடர்ச்சியான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது மீண்டும் ’டிமான்டி காலனி’ டைப்பில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ’D-ப்ளாக்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுவிஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில், ரான் எத்தன் யொஹான் இசையமைப்பில், அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள.

இந்த படத்தை எருமைச்சாணி குழுவினர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுதொடர்ச்சியாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதிக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று கோலிவுட் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் நடிகர் அருள்நிதி சீனு ராமசாமி இயக்கத்தில் டைட்டில் வைக்கப்படாத ஒரு திரைப்படம், ’களத்தில் சந்திப்போம்’ மற்றும் டைரி’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment
Ads