Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் திருத்தலத்தில்.... ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று ...

by Admin

ஆன்மீகம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் திருத்தலத்தில்....  ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று ...

 ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புரம் விழா மிக முக்கியமானநிகழ்ச்சியாகும். ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கடந்த 14  ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் திருநாளான அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது, 5ம் திருநாளான கடந்த 18 ஆம் தேதி ஐந்து கருட சேவையும்  7 ஆம் திருநாளான  கடந்த 20 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.இந்நிலையில் 9 ஆம் திருநாளன ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடை பெற்றது..திரு ஆடிப்பூரத் தேர்த் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் "கோவிந்தா கோவிந்த" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக  இழுத்தனர். மேலும் இன்று விருதுநகர் மாவட்டம் உள்ளுர் விடுமுறை என்பதால் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads