Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உலகம் முழுவதும்1020 திரையரங்கங்களில் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் கொலை

by Editor

சினிமா
 உலகம் முழுவதும்1020 திரையரங்கங்களில் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் கொலை

நடிகர் விஜய்ஆண்டனி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் கொலை க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.”

’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
’கொலை’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தமிழ்நாடு முழுவதும் 300 திரைகளில் வெளியிடுகிறது. தமிழ்நாட்டை போன்றே தெலுங்கில் விஜய்ஆண்டனிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. பிச்சைக்காரன், பிச்சைக்காரன் – 2 தமிழ்நாட்டுக்கு இணையாக பாக்ஸ்ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது அதனால் 300க்கும் மேற்பட்ட திரைகளில் ஆந்திரா – தெலங்கானா மாநிலத்தில் வெளியாகிறது.
கர்நாடகா மாநிலத்தில் 75 திரைகளிலும்,கேரள மாநிலத்தில் – 60 திரைகளிலும்வட இந்திய மாநிலங்களில் – 35 திரைகளிலும்வெளிநாடுகளில் – 250 திரைகளும் ஆக மொத்தம்1020 திரைகளில் உலகம் முழுவதும் கொலை படம் வெளியாகிறது.

Share via
Advertiment
Ads