Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மாவீரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலிக்கலாம்

by Admin

சினிமா
 மாவீரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலிக்கலாம்

மண்டேலா படத்தின்  இயக்குனர்  மடோன்அஸ்வின் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மாவீரன் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்ட பலர்இவர்களுடன்இணைந்தநடித்துள்ளனர் .மூன்றுநாட்களுக்கு முன்பு  வெளியான படம் முதல் நாளிலிருந்து வசூலை அள்ளி குவித்து வருகிறது. முதல் நாளில் ஏழு கோடிக்கு அதிகமாகவும் இரண்டாம் நாளில் 9 கோடியையும் இந்திய அளவில் முதல் நாளில் 12 கோடிக்கு மேலும் வசூலித்து 30 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது .ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இப்படம் அதிக அளவில் வசூலை ஈட்டும் என்கிற கணிப்பு உள்ளது. படத்தில் பட்ஜெட் 33 கோடியாக இருப்பினும் மூன்றே நாள்களில் அது கிட்டத்தட்ட மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்து சிவகார்த்திகேயன் டாக்டர்,டான் படத்தை போன்று 100 கோடிக்கு மேல் வசூலிக்கலாம் என்கிற கருத்து ஹாலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது..சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினால் நடிக்கப்பட்ட மாமமன்னன் வசூல் மாவீரனை அடுத்த நிலையில்தான் உள்ளது .இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், அடுத்தடுத்து அவருக்கு படக்கு வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

Share via
Advertiment
Ads