Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகை நயன்தாராவாங்கிய திரையரங்கு.....?

by Admin

சினிமா
நடிகை நயன்தாராவாங்கிய திரையரங்கு.....?

தமிழ் திரை உலக பெண் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் கமலஹாசன் தவிர்த்து அனைத்து முன்னணி நடிகர்களோடையும் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் .இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தவர் , தற்பொழுது சாருக் கான் உடன் இணைந்து ஜவான் என்னும் படத்தில் நடித்து வருவதன் மூலமாக இந்தி திரை உலகிலும் கால் பதித்து கொண்டிருப்பவர்.  இவர்  நடிப்பு  மட்டுமின்றி வேறு சில தொழில்களிலும்  முதலீடு  செய்து வருகிறார். அதில் ரவுடி பிக்சர்ஸ் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வடசென்னை 50 ஆண்டுகால பழமை வாய்ந்த திருவொற்றியூர் மெயின் ரோட்டில் ,  தண்டையார்பேட்டை பகுதியில் இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கை விலைக்கு வாங்கி இரண்டு பெரிய திரையரங்கை கட்ட உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த திரையரங்கு 2020இல் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. பாலச்சந்தரின் பாமா விஜயம் 1967இல் இந்த திரையரங்கில் தான் முதல் படமாக வெளியானது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நான்கு தலைமுறைகளின் படங்களை வெளியிட்ட திரையரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads