Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினியின் படத்தில் வில்லனாக போகிறாரா விக்ரம் ?

by Admin

சினிமா
ரஜினியின் படத்தில் வில்லனாக போகிறாரா விக்ரம் ?

 ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதோடு, அவரது மகள் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் ரஜினியை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட உள்ளது இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நடிகர் விக்ரமின் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் முதலில் தயங்கியதாகவும் கதை கேட்ட பின்பு நடிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து கொண்டிருக்கிற பொழுது பட தயாரிப்பு நிறுவனம் அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக சொன்னதால் ,கிட்டத்தட்ட வில்லனாக நடிக்கின்ற முடிவுக்கு விக்ரம் வந்திருப்பதாக தகவல். 10 கோடி சம்பளம் பெறும் விக்ரமிற்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் அவருடைய கேரியரில் இது எந்த அளவு சரியாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share via
Advertiment
Ads