Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை  : அமேசான் தளத்தில் 22–ந் தேதி ஒளிபரப்பு

by Editor

சினிமா
ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை  : அமேசான் தளத்தில் 22–ந் தேதி ஒளிபரப்பு

 


அமேசான் பிரைம் வீடியோ 8 நாள் பொழுதுபோக்கு கொண்டாட்டம் விழாவை நடத்துகிறது. இதில் நடிகர் ஆர்யா நடிப்பில், பா.ரஞ்சித் டைரக்ஷனில் நடித்த சார்பட்டா பரம்பரைதிரைப்படம் இம்மாதம் 22 ந் தேதி வெளியாகிறது. ஒரே நாளில் 240 நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் பார்க்கலாம். வெளியாகிறது. இந்த படம் தெலுங்கிலும் சார்பட்டா என்பது 1970 ல் மெட்ராஸின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு தமிழ் விளையாட்டு சார்ந்த படம். அந்தக் காலத்தின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. முன்னதாக ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் கபாலியை இயக்கிய பா. ரஞ்சித் தன் படத்தில் ஆர்யா ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். வட சென்னையில் இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரு குலங்களுக்கு இடையிலான மோதலைச் சுற்றி கதை நகர்கிறது.


இது தவிர பர்ஹான் அக்தர் நடித்த டூபான் திரைப்படம், பகத் பாசில் நடித்த மாலிக் மலையாளப் படம், கன்னட நகைச் சுவை இக்காட் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


கிராமி விருது பெற்ற பில்லி எலிஷ், ஹெர், கிட் குடி ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.
அமேசான் ஒரிஜினல் ஹாஸ்டல் டேஸ் 2வது சீசன் ஜூலை 23 ந் தேதி வெளியாகிறது. அமேசான் பிரைம் ஆண்டு சந்தா ரூ.999 கட்டணம் ஆகும். பிரபல திரைப்படம், டி.வி.ஷோ, காமெடி, அமேசான் மியூசிக் விளம்பரம் இல்லாத இசை பிரைம் கதை வாசிப்பு, வீடியோ கேம் வசதிகள் அனைத்தும் இதில் அடங்கும்.

Share via
Advertiment
Ads