Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

யூரோ கால்பந்து- கோப்பையை வென்றது இத்தாலி அணி

by Editor

விளையாட்டு
 யூரோ கால்பந்து- கோப்பையை வென்றது இத்தாலி அணி

 இங்கிலாந்தில் நடந்து வந்த யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் துவக்கத்தில் இரண்டாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணி ஒரு கோல் போட்டதால் ஆட்டம் மிக விறுவிறுப்பாக துவங்கியது.

அதன்பின் எந்த அணியினரும் கோல் போடாததால், முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது பாதியில் 67 வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியோனார்டோ போனுசி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.இதனால், ஆட்டத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இரு அணிகளுக்குமே கோல் ஏதும் போட முடியவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads