Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோவிட் பரவல் எதிரொலி-பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக்

by Editor

விளையாட்டு
 கோவிட் பரவல் எதிரொலி-பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக்

டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கோவிட் பரவல் எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை விதித்திருந்தது.

உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கோவிட் தடுப்பு விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

இதனால், அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும். இதனையடுத்து, இந்த ஒலிம்பிக் திருவிழா பார்வையாளர்கள் இன்றி வித்தியாசமான முறையில் நடைப்பெற உள்ளது. ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய அவசர நிலையால் ஒலிம்பிக் கமிட்டி பெருத்த இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share via
Advertiment
Ads