Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர்  வெளியிடப்பட்டது.

 நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்ட முறையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.படத்தின் ஏழு பாடல்களும் வெளியிடப்பட்டதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .லைக்கா மெட்ராஸ் ட்ராக்ஸ் இணைந்து எடுத்த இந்த இரண்டாவது பாகத்தினுடைய  வெளியீடு அடுத்த மாதம் 20 28ஆம் தேதி வெளிவர இருப்பதால், அதன் முன்னோட்டமாக இன்று ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் உடன் நடிகை குஷ்பு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நடிகர் ரகுமான், நடிகர் சிம்பு உள்பட திரை உலக பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் அனைவருக்கும் நன்றி என்று தமிழில் பேசி பெருத்த கரகோஷத்தை பெற்றார்.. ஒவ்வொரு கதாபாத்திரமும் சமமான நிலையிலேயே வடிவமைக்கப்பட்டிருப்பதாக, ஜெயம் ரவி கூறினார் நடிகர் கார்த்தி திரிஷா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கருத்துக்களை பதிவு செய்தனர் பெருத்த ரசிகர்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதால் படம் எப்பொழுது வரும் என்கிற ஆவலை இரண்டாம் பாகம் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment
Ads