Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூர்யா மும்பைக்கு குடியேறி விட் டாரா.........

by Admin

சினிமா
 சூர்யா மும்பைக்கு குடியேறி விட் டாரா.........

நடிகர் சூர்யா மும்பையில் 72 கோடி ரூபாய்க்கு புதிய பிளாட் வாங்கி உள்ளதாகவும் அங்கு குடியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.நடிகர் சிவகுமாரின்  மூத்த மகன் சூர்யா மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தம் மனைவி,குழந்தைகள்,தம்பி காா்த்தி அவா் மனைவி,குழந்தைகள் என பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த நடிகர்  சூர்யா  தன்னுடைய  நடிப்பாலும் தான்  தயாரித்த  படத்தாலும்   பல்வேறு சிறப்புகளை  பெற்றவர். திரைப்படம் தயாரிப்பதோடு  மும்பையில்  பல்வேறு தொழில்களையும் செய்து வருகின்ற சூர்யா தன் மனைவியின் ஊரான மும்பைக்கு இடம்பெயர்ந்து  இருப்பது சினிமாவில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தி உள்ளது. அஜய் குமாரை வைத்து சூர்யா தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சூரரைப் போற்று  இந்தி  படம்  எடுத்து   வருகிறார். அதன் காரணமாகவும்  மும்பையில் இருக்கின்ற தொழிலை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் மனைவியினுடைய சொந்த ஊரான மும்பைக்கு இடம்  பெயர்ந்து இருக்கிறார்என்று சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

Share via
Advertiment
Ads