Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் -2  அகநக பாடல் நாளை வெளியீடு

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன் -2  அகநக பாடல் நாளை வெளியீடு


பிரபல வரலாற்று நாவலாசிரியர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்  கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ெஜயம்ரவி,நாசர்,பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யாராய்,த்ரிஷா எனபெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பொன்னியின் செல்வன் -1 கடந்த ஆண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி என பான்  இந்திய படமாக வெளியாகி 500 கோடிக்குமேல் வசூலில்பெற்று சாதனை படைத்தது.இப்படத்தின்  தொடர்ச்சி  இரண்டாம்  பாகம்  2023  ஏப்ரலில்  வெளியாகும் என்கிற அறிவிப்பையும்  வெளியிட்டனர்.இந்நிலையில்,இரண்டாம்  பாகத்தின்  போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் முடிந்த நிலையில் ,படத்தில் இடம் பெற்ற  அக நக  எனும் பாடல்  காட்சி  திங்கள் கிழமை  வெளியிட  உள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது   பட  வெளியீட்டுக்கு  முன்பாக  டீசர்  வரும் 29 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது.ஏப்ரல் 28 ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
 

Share via
Advertiment
Ads