Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிவ கார்த்திகேயன் செல்வாக்கு சரியவில்லை.

by Admin

சினிமா
சிவ கார்த்திகேயன் செல்வாக்கு சரியவில்லை.

குழந்தைகள்,பெண்கள்,இளைஞர்களை ரசிகர்களாக அதிக அளவில் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர்,டான் படம் வெற்றி பெற்றநிலையில் அவரது பிரின்ஸ் படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.ஆனால்,படம் ரசிகர்களின்எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால் படம் தோல்வியைத்தழுவியது.இதனை அடுத்து சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கை முடிவுக்கு  பொய்யான கருத்துக்கள் உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்டன.ஆனால்,சிவகார்த்திகேயன் இது குறித்து பெரிதாக அக்கறை காட்டாமல் தம் படமான மாவீரனில்முனைப்பு காட்டி நடித்து வந்தார்.தற்பொழுது மாவீரன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேளையில் படக்குழுஇறங்கியுள்ளது.தற்பொழுது மாவீரன் படம் ஒ.டி.டி.,சேட்டிலைட் ,இணையதள விற்பனை என வியாபாரம் அதிக தொகைக்கு கேட்கப்பட்டுள்ளதாலும் படம் திரையரங்கு உள்பட அதன் விநியோகம் நூறு கோடியை எட்டும் என்று சொல்கிறார்கள்.இதன் மூலம் அவரது பிரின்ஸ் படத்தோல்வி அவரது திரைப்பட வியாபாரத்தை பாதிக்கவில்லை என்பதோடு தமிழ்த்திரையுலகில் அவரது இருப்பு பலமாகவே உள்ளது என்பதை நிருபித்துள்ளது.,மாவீரன்.

Share via
Advertiment
Ads