Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம்.

by Editor

ஆன்மீகம்
திருப்பதி மலையில் ஏழுமலையானின் தெப்ப உற்சவம்.

திருப்பதி திருமலையில் கடந்த மூன்றாம் தேதி முதல்  ஏழுமலையான் தெப்ப உற்சவத்திருவிழா  நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடை பெறும் தெப்போற்சவத்தின்  மூன்றாவது நாளான இன்று உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்கர்களுக்கு அருள் பாலித்தார்.தெப்போற்சவத்தை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவமூர்த்திகள் நான்கு மாட வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை அடைந்தனர். தெப்பத்தில் உபய நாச்சியார்கள் சமதராக எழுந்தருளினார் மலையப்ப சுவாமி தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளி உற்றவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.பின்னர் தெப்பக்குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு உற்சவமூர்த்திகள் அருள் பாலித்தனர்.
 

Share via
Advertiment

More Stories

Ads