Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்புக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? மேனேஜர் விளக்கம்

by Admin

சினிமா
சிம்புக்கு இலங்கை பெண்ணுடன் திருமணமா? மேனேஜர் விளக்கம்

நடிகர் சிம்பு தன் நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அவர் ஐஸ்வர்யா ,நயன்தாரா,ஹன்சிகா என காதலில்கிசுகிசுக்கப்பட்டார் .ஆனால்,யாரையும் திருமணம் செய்யவில்லை.அதன் பிறகு அவருடைய திருமணம் பற்றியே அடிக்கடி செய்திகள் வந்த வண்ணமிருந்தன .இந்நிலையில்,அவர் குடும்பத்தினரும் தீவிரமாக பெண் தேடுவதாக தகவல் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில் கடவுள்தான் அவருக்கு நல்ல பெண்ணை மணமகளாக தரவேண்டும் என்று அவரது அப்பா வெளிப்படையாகவே சொன்னார்.தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றிப்பெற்று வரும் நிலையில்  இது பற்றிய பேச்சு அதிகமானது .சிம்புவும் கல்யாணம் பற்றிக்கேட்டாலே  கோபமாகிவிடும் நிலைக்குத்தள்ளப்பட்டார்.இப்படிப்பட்டசூழலில்தான் அவர் இலங்கை பெண்ணை வெளிநாட்டில் வைத்து திருமணம்செய்யப்போகிறார் எனும் செய்தி தீயாய் பரவ.. அதுஉண்மையில்லை.அப்படி திருமணம் குறித்து முடிவெடுத்தால் ஊடகங்களுக்குத் தான் முதலில் தெரிவிப்போம் என்று சிம்புவின் மேலாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
 

Share via
Advertiment
Ads