Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

by Admin

சினிமா
விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

எப்பொழுதும் பேசப்படும் நபர்களில்  தவிர்க்க முடியாத நபராக  மாறியுள்ளார் விக்னேஷ் சிவன்.துணிவு படம் வந்ததும்
அஜித்தின்  அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி தீபாவளிக்கு தந்து விடுவார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கையில் லைகா- அஜித் இருவருக்கும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்கவில்லை என்கிற பொத்தாம் பொதுவான கருத்து உலவிய நிலையில்.விக்கி மாற்றப்பட்டு ஏ.கே.62 இயக்கும் வாய்ப்பு மகிழ்திருமேனி கைக்குச்சென்றதுஇருப்பினும் ,இது குறித்து எதையும் கூறாமல் மெளனம் காத்த விக்னேஷ் சிவன் வரும் தீபாவளிக்கு தம் படத்தை வெளியிட தீவிரமாக முயன்று வருகிறார். இப்படத்தில் ,விக்னேஷின் ஆஸ்தான நடிகர் விஜய் சேதுபதியும் லவ்டுடே பிரதீப் உள்ளதாகவும்  படத்தை கமல்ஹாசனின்  ராஜ்கமல் இண்டர்நேஷன் தயாரிக்க இருப்பதாகவும் கோடம்பாக்கம்முழுவதும் பரவி வருகிறது செய்தி.இப்படம் குறித்த முறையான அறிவிப்பு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகஉள்ளதாக தகவல்.

Share via
Advertiment
Ads