Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எல்லோரும் என் பிரியமான பக்தர்களே"

by Admin

ஆன்மீகம்
எல்லோரும் என் பிரியமான பக்தர்களே

"அர்ஜீனன்-"கிருஷ்ணா உங்களுடைய இந்த பயங்கர உருவத்தில் கெளரவ படையினரும் எங்கள் படையைச்சேர்ந்த
வீரர்களும் கூட என் கண்ணெதிரேஅழிந்து போவதாகக்காட்டுகிறீர்கள்.இந்த பயங்கர நிகழ்ச்சிகளை எனக்கு எதற்காகக்
காட்டினீர்கள்.அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும் .?என்பதை கூறுங்கள்.
கிருஷ்ணர்-"அர்ஜீனா,எந்த போர் வீரர்களின் அழிவு முடிவு பெற்றதோஅவர்கள் போர் புரியாமலிருந்தாலும் அழியத்தான்
போகிறார்கள்.இந்த இரு தரப்பு வீரர்களில் யார் அழிவார்கள்?யார் பிழைப்பார்கள் என்பதையெல்லாம் நான் ஏற்கனவே
முடிவு செய்து விட்டேன் மரணம் அடையப்போகிறவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.இந்த போரில் உயிர் பழைக்கப்
போகிறவர்களை யாராலும் கொல்ல முடியாது."
"அர்ஜீனா உனது உறவினர்களும் நண்பர்களும் பெரியோர்களும் உயிரை விடத்தயாராகி விட்டார்களே என்ற காரணத்தினால் தானே நீ போர் செய்ய மறுக்கிறாய்.நீ இவர்களைக்கொன்றாலும் கொல்லாவிட்டாலும் இவர்கள் உயிர்
பிழைக்கப்போவதில்லை.இவர்களை நானே அழிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.இவர்களை யாராலும் காப்பாற்ற
முடியாது.ஆகவே என்னுடைய கட்டளையை ஏற்று நீ போர் புரிவதுதான்  நல்லது."."அர்ஜீனா, நீ உன் பகைவர்களை
வென்று இந்த நாட்டையும் செல்வத்தையும்பெற்றுக்கொள்.இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டவர்கள்.ஆகவே நீ
எழுந்திரு. போர் புரிந்து உன் புகழைப்பெற்றுக்கொள்வாயாக."
"அர்ஜீனன்-"பகவானே உங்களுடைய இனிதான மானுட வடிவைப்பார்த்து இப்போதுநிலை பெற்ற மனம் கொண்டவனாகி விட்டேன்.எனது மனம் தெளிவு பெற்றது.உங்களின் பக்தர்களைப்பற்றி நான் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"
கிருஷ்ணர்-"எல்லா கடமைகளையும் என் பொருட்டு செய்கிறவன்.என் மீது பக்தி பூண்டு ஆசைகளை ஒழித்தவன்.தன்னலம்
இல்லாமல் எல்லோரிடமும் அன்பு காட்டுபவன்.இன்ப துன்பங்களை சமமாக  கருதுபவன்.ஒருவன் தெரியாமல் செய்யும்
குற்றங்களை  பொறுத்து அவர்களுக்கு நன்மையை தொடர்ந்து செய்பவன்  எல்லோரும் என் பிரியமான பக்தர்களே"
 

Share via
Advertiment

More Stories

Ads