Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உங்கள் விஸ்வரூபத்தை நான்  காண வேண்டும்

by Admin

ஆன்மீகம்
உங்கள் விஸ்வரூபத்தை நான்  காண வேண்டும்


அர்ஜீனன் - "பகவானே,உங்களைப்பற்றி பல விபரங்களைத்தெளிவாக கூறினீர்கள்.உங்களின் மகா சக்திகள் அடங்கிய
உங்கள் விஸ்வரூபத்தை நான் காண விரும்புகிறேன்."
கிருஷ்ணர்-"அர்ஜீனா,நீ எனது சிறந்த பக்தனும் சிறந்த நண்பனும் ஆவாய்.ஆகவே நான் எனது விஸ்வரூபத்தை உனக்கு
காட்டுவேன்.எனது விஸ்வரூபத்தை பார்க்கும் சக்தி உனக்கு இல்லை.ஆகவே உனக்கு அந்த சக்தியை இப்பொழுது
அளிக்கிறேன்."
இவ்வாறு கூறிய கிருஷ்ணர் அர்ஜீனனுக்கு ஞானசக்தியை அளித்தார்.அதன் பிறகு கிருஷ்ணர்,ஈஸ்வரரூபம் என்றும்
விராட் ரூபம் என்றும் கூறப்படுகின்ற தனது உருவத்தை அர்ஜீனனுக்கு காட்டினார்.கிருஷ்ணர் தனது உருவத்தை பூமிக்கும்
வானுக்குமாக பெருக்கிக்கொண்டு நின்றார்.கிருஷ்ணரின் இந்த தோற்றம் மிகவும் பயங்கரமாக இருந்தது.
பலவிதமுகங்களோடும் பல பல ஆயுதங்களுடன் தெய்வீக ஆடைகளும் மாலைகளும் அணிந்து கொண்டு பலவித வாசனைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜீனனுக்கு தோற்றம் அளித்தார்.இதைக்கண்ட அர்ஜீனன் வியந்து அவரைப்பயத்துடன்
வணங்கினான்.
அர்ஜீனன்-"பகவானே ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே நேரத்தில் ஒளி வீசினால் எப்படி இருக்குமோ
அது போன்ற ஒளியை உங்களிடம் காண்கிறேன். நீர், நெருப்பு,காற்று,சுவர்க்கம்,பாதாளம் முதலிய அனைத்தும் தங்களின்
திருமேனியில் அடங்கியிருப்பதை பார்க்கிறேன்.எனது பகவானே இப்போது என்னுடன் போர்செய்யத்தயாராக இருக்கும்
துரியோதனன் முதலான திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளில் ஒருவர் கூடமீதமில்லாமல் உங்களில் நுழைந்து கொண்டு
இருப்பதையும் பார்க்கிறேன்.மேலும் இருபடைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் கூட்டம் கூட்டமாக
உங்கள் வாயில் நுழைந்து கொண்டு இருப்பதையும் பார்க்கிறேன்.கெளரவ படையின் மிக முக்கியமான வீரர்களாகிய பீஷ்மர்,துரோணர்,கர்ணர் போன்றவர்களும் உங்கள் வாயில் நுழைந்து கொண்டு இருப்பதைப்பார்க்கிறேன்.(நாளை தொடரும்)

Share via
Advertiment

More Stories

Ads