Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று ஞாயிற்றுக்கிழமை சூரியவழிபாடு அவசியம்.

by Admin

ஆன்மீகம்
இன்று ஞாயிற்றுக்கிழமை  சூரியவழிபாடு அவசியம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை  சூரியவழிபாடு அவசியம்.
சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.

அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களைஅச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது.

ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதிக்கலாம். முறையாகத் துதித்தால் எந்த தெய்வமும் அருள்புரியும் என்று நிலைநாட்டினார்.

சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல் வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.

சௌரம் என்ற சூரிய வழிபாட்டில் காயத்ரி ஜெபம் முக்கியமானது. வேதங்களில் சூரிய வணக்கமும் அடங்கியுள்ளது. உடல் ஆரோக் கியத்திற்காகவும், கண் பார்வை சிறப்பாக இருக்கவும் சூரியனை வழிபடுகிறார்கள். ஞானம் வேண்டியும் வழிபடலாம். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதாயுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.

சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.

"யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது சூரிய காயத்ரியின் பொருள். சூரியனை பொங்கல் திருநாளில் வழிபட்டு ஞானமும் ஆரோக்கியமும் பெறுவோம்.

Share via
Advertiment

More Stories

Ads