Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெல் பாட்டம் ஓடிடி ரிலீஸ். திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

by Editor

சினிமா
பெல் பாட்டம் ஓடிடி ரிலீஸ். திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு திரையரங்கிலேயே ரிலிஸ் செய்ய முடிவு செய்தது. ஆனால் திரையரங்கில் ரிலீஸான இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Share via
Advertiment
Ads