Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குருவாயூர் கிருஷ்ணன், திருவனந்தபுரம் பத்மநாபசாமியை தரிசிக்க அனுமதி

by Editor

ஆன்மீகம்
குருவாயூர் கிருஷ்ணன், திருவனந்தபுரம் பத்மநாபசாமியை தரிசிக்க  அனுமதி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையிலும், 6.50 முதல் 7.20 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் குருவாயூர் கோவிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உத்தரவுபடி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக  திறக்கப்படுகிறது.ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் திருமணம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு திருமணத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.திருமண நிகழ்ச்சிகளில் வீடியோ, புகைப்படம் எடுக்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு எத்தனை திருமணங்கள் வரை நடத்தலாம் என்பது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads