Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஸ்ரீ ஐயப்பன் கோவில் 63 ஆம் ஆண்டு மண்டல பூஜை நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

by Editor

ஆன்மீகம்
ஸ்ரீ ஐயப்பன் கோவில் 63 ஆம் ஆண்டு மண்டல பூஜை நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் 63 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சி, மாலையில் கொடியேற்றம் உற்சவமானது துவங்கியது.

சபரிமலையை சேர்ந்த சந்தோஷ் திருமேனி உற்சவத்தை துவக்கி வைத்து கொடியேற்றம் செய்தார். 63ம் ஆண்டு மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வான, சுவாமி ஐயப்பன் ஆராட்டுக்கு புறப்படுதல் மற்றும் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ஐயப்பன் ரதத்தில் முக்கிய விதிகள் வழியாக ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஊர்வலமாக வந்து சேர்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 19ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த கொடியேற்ற உற்சவத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads