Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 வழக்கை ரத்து செய்ய மன்சூர் அலிகான் மனு!

by Editor

சினிமா
 வழக்கை ரத்து செய்ய மன்சூர் அலிகான் மனு!

 


 தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய மன்சூரலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்ய உள்ளார்.


கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஒருபக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை மன்சூரலிகான் தெரிவித்தார். இதனை அடுத்து தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகானுக்கு அறிவுரை கூறிய நீதிபதி சுகாதாரத்துறைக்கு ரூபாய் இரண்டு லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை ஒத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மன்சூரலிகான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads