Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜி.பி.முத்து காட்டில் மழை

by Admin

சினிமா
ஜி.பி.முத்து காட்டில் மழை


டிக்டாக்,யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து.தனது வெகுளித்தனமான,வெள்ளந்தியான பேச்சு ,எப்பொழுதும்சிரிக்கும்முகம் இவற்றால் தன்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்பிக்பாஸில் பங்கேற்கும்  வாய்ப்பு வந்தது.இரண்டு வாரங்களுக்குள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து..இவர்தான்பிக்பாஸில் ெஜயிக்கப்போகிறார் என்று பேச்சு வந்த நிலையில் ,திடிரென தம்மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால்,வீட்டுக்குச்செல்வதில் குறியாக இருந்தார்.ஒருவழியாக பிக்பாஸ் நடத்தும் நிர்வாகம் ஒத்துக்கொண்டு அனுப்பியது.முத்து இருக்கையில்டி.ஆர்.பி ரேட்டிங் சர்ரென்று எகிறியதாக தகவல்.ஆனால்,முத்து வெளியே வந்த பின்பு ப்ரேமோஷன்,கடைத்திறப்பு, சன்னி லியோனுடன்  ஆட்டம்  பாட்டமென கொண்டாட்டத்தில்  உள்ளார். தற்பொழுது  வடபழனியிலுள்ள ஸ்பா  திறப்பு  விழாவில் கூல் சுரேஷ்ஜி.பி.முத்துவை கலாய்க்கும் விதமாக ,பிக்பாஸில்  பெண்களைத் தடவ வாய்ப்பில்லாததால் வெளியேறியுள்ளார் என்று அடித்த மட்டமான கமாண்ட,சீப் பப்ளிசிட்டி என முத்துக்கு ஆதரவாக யூடியூப்பர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Share via
Advertiment
Ads