Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்து அணி வெற்றி- இலங்கை அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

by Staff

விளையாட்டு
நியூசிலாந்து அணி வெற்றி- இலங்கை அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டி20 உலக கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவித்துள்ளது. குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறியது. தொடக்க வீரர்கள் இருவரும் தலா ஒரு ரன்னில் வெளியேற அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் 8 ரன்களில் வெளியேறினார். டார்லி மிட்செல் 22 ரன்களிலு, நீஷம் 5 ரன்களிலும், சாண்ட்னர் 11 ரன்களிலும் வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கிலென் பிளிப்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் விளாசினார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.பின்னர் ஆடியஇலங்கைஅணி19.2 ஒவாில்102 ரன்களளெடுத்து நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.

Share via
Advertiment
Ads