Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொங்கலுக்கு அஜித்தின் துணிவா..?  விஜய்யின் வாரிசா..?

by Admin

சினிமா
பொங்கலுக்கு அஜித்தின் துணிவா..?  விஜய்யின் வாரிசா..?


தமிழகத்திரைத்துறையில் அசைக்கமுடியாத நட்சத்திரங்களாகஜொலிக்கும் அஜித்-விஜய்...இருவருக்கும் ரசிகர்பட்டாளங்கள் அதிகம்.படம் வெளியானால் கோடிகளை அள்ளி குவித்து விடும்.இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெ யண்ட் வாங்கியிருக்கிறது.தமிழக திரையரங்குகள் இவர் வசமே இருக்கிறது.படம் இவர் வழியாக வெளியிட்டால் பணம் கைக்கு வந்து விடும் என்பதில்தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பர். விஜய் படம் அவரது உறவினரான தயாரிப்பாளர் லலித் தமிழக விநியோக
உரிமையை பெற்றிருக்கிறார். வாரிசு படமும் பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இரண்டுபெரிய படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் யாருக்கு திரையரங்கை கொடுப்பது என்கிற குழப்பமிருந்தாலும்..உதயநிதி வசமே இருநூறு திரையரங்கு உள்ளதாகவும் துணிவு வெளிவருவதில் எந்தப்பிரச்சனை இல்லை என்றும் வாரிசு படத்தின்வெளியிடுதான் கேள்விக்குறி என்று கோடம்பாக்கத்தில் தகவல்.. விஜய்- உதயநிதியோடு பேசினால் சுமுக உடன்பாடு மூலம் இரண்டு படங்களும் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் என்கிறார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம்.

Share via
Advertiment
Ads