Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

துபாயில் தீபாவளியை கொண்டாட பறந்த தளபதி

by Staff

சினிமா
துபாயில் தீபாவளியை கொண்டாட  பறந்த தளபதி

இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, ஷியாம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் தீபாவளி கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.அவர் துபாயில் தீபாவளியை கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.இன்று காலை துபாய் செல்வதற்காக அவர் விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

Share via
Advertiment
Ads