Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா

by Staff

விளையாட்டு
மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் ஒரேயொரு தோல்வியை அடைந்த இந்திய அணி மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சில்கட்டில் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.38 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட்களை மட்டுமே 40 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் சுற்றில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads