Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிரடி ஆட்டக்கார வீரர் நீக்கம்

by Staff

விளையாட்டு
டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிரடி ஆட்டக்கார வீரர் நீக்கம்

டி20 உலகக்கோப்பை தொடர் அக்.16ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட.ஆஸ்திரேலியாவுக்கு செல்ல பிற நாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை தவறவிட்டார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads