Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடி யார்?

by Others

சினிமா
பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடி யார்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பாபநாசம்.

மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரிமேக்காக இப்படம் உருவாகி இருந்தது. கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருந்தார். மலையாளத்தில் திரிஷ்யம் 2 வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் பாபநாசம் 2 உருவாக உள்ளது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடிக்க போவதில்லை எனவும் அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Share via
Advertiment
Ads