Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெந்து தணிந்தது காடு வெற்றிச்சந்திப்பில் கார்-பைக் பரிசளிப்பு

by Admin

சினிமா
வெந்து தணிந்தது காடு வெற்றிச்சந்திப்பில் கார்-பைக் பரிசளிப்பு

கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் சிம்பு நடித்து ஐசரி கணேசன் தயாரிப்பில் வெளிவந்த படம் வெந்து தணிந்தது காடு.
இந்த மாதம் வெளியான இப்படத்தைப்பற்றி கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்ததால் முதல் இரண்டு நாளில்
வசூல் பத்து கோடிக்குள் இருந்ததால் படக்குழு முதலில் அதிர்ச்சியடைந்தது.படம் வசூலை ஈட்டித்தருமா ?என்கிற
சந்தேகத்தை உருவாக்கியது.இந்நிலையில் படம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வசூலை வாரி குவித்ததால் தயாரிப்புமட்டத்தில் மகிழ்ச்சிப்பொங்கியது.விளைவு சிம்புவிற்கு டெயோட்டோ வெல்பையர் காரும் இயக்குனர் வாசுதேவ மேனனுக்கு என்பீல்ட பைக்கும் வாங்கி கொடுத்து அசத்தினார் தயாரிப்பாளர் ஐசரிகணேசன்.அத்துடன் கெளதம் மேனனுடன் பைக்கிலும் ஒரு ரவுண்ட் போய்வந்தார இதுவரை கதாநாயகர்கள் தான்   இயக்குனர்களுக்கு கார் ,ப்ளாட் வாங்கி   தந்திருக்கிறார்கள் ரமணா  படஇயக்குனர்             முருகதாஸிற்கு சேன்ட்ரோ கார் விஜயகாந்த் தந்தார்.வாலி படத்திற்கு எஸ் ஐே  சூர்யாவிற்கு தி.நகரில் ப்ளாட் வாங்கி தந்தார் அஜித்...இதற்குப்பிறகு கமல் விக்ரம் படத்தின் இயக்கனர் லோகேஷ் கனகராஜிற்கு கார் வழங்கினார்.சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ஜ்,உதவி இயக்குனர்களுக்க பைக் வாங்கிதந்தார்.இப்பொழுது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads