Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பகாசூரன் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது

by Staff

சினிமா
பகாசூரன் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பகாசூரன் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதனுடன் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Share via
Advertiment
Ads