Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்கஉள்ளாரா....

by Admin

சினிமா
புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்கஉள்ளாரா....

இயக்குனர் சுகுமார் இயக்கிய புஷ்பா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. பான் இந்தியா லெவலில் வெளியான இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் மட்டுமல்லாது வசூலிலும் சாதனை படைத்தது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில்  அல்லு அர்ஜுனும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்தனர். இப்போது, இந்தப் படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பூஜையுடன் கொண்டாடப்பட்ட இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் இந்த இரண்டாம் பாகம் குறித்த பல செய்திகள் கடந்த சில நாட்களாக  வைரலாகி  வருவது  தெரிந்ததே. விஜய் சேதுபதி ஒரு பவர்ஃபுல் ரோலில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இந்த அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.மேலும், இப்படத்தில் சாய் பல்லவியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த செய்திக்கு படத்தின் தயாரிப்பாளர் ஒய் ரவிசங்கர், புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா புதிய தோற்றத்தில்  நடிக்க இருப்பதாக  தெரிவித்துள்ளார். இருவரின் தோற்றமும் முதல்படம் போலவே இருக்கும்.. ஆனால் சில மாற்றங்கள் இருக்கும். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும் மேலும் புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்ற. செய்தி உண்மை இல்லை.என்றாா்.

Share via
Advertiment
Ads