Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அதிகாலையில் விஜய்தேவர கொண்டாவுக்கு கூடிய கூட்டம்

by Admin

சினிமா
அதிகாலையில் விஜய்தேவர கொண்டாவுக்கு கூடிய கூட்டம்

 
அதிகாலையில் விஜய்தேவர கொண்டாவுக்கு கூடிய கூட்டம்லைகர் எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் திரையரங்க வாசலில் புலம்பி செல்கிறார்கள்.தமிழ்த்திரையுலகில் ஏற்கனவே பல முறை  அரைத்த மாவை அரைக்க ..சிங்கமும் புலியுமாக உடல் வலிமையை உரமேற்றி 25 கோடி  சம்பளம் வாங்கியுள்ள விஜய் தேவர கொண்டாவுக்கு கதையைச்சொல்லாமல் உடம்பை மட்டும் தயார்படுத்தசொன்னதை செய்துவிட்டார்.அர்ஜின் ரெட்டி, கீதா கோவிந்தம் போலிருக்கும் என்று நினைத்து கல்லூரி மாணவர்கள் தியேட்டரில்  அதிகாலை 4.00  மணிக்கு படத்தைப்பார்த்து விட்டு கல்லூரிக்குப்போகலாம் என்று ஒரே கல்லில் இரண்டுமாங்காய் அடக்க நினைத்தவர்கள் செய்ததோ...நித்திரைதான் .அனன்யா பாண்டேவுடன் மூன்று பாட்டுக்கு மட்டும்
லேசாக கண் மலர்த்தி பார்த்துவிட்டு...ஒன்பது  மணிக்கு  வகுப்பில்  தூங்காதிருக்க  ஆனந்த சயனத்தில் ஆழ்ந்தனர்.90 கோடி செலவு செய்து பான் இந்திய படமாக பிய்த்துக்கொண்டு ஒடும் என செய்த புரமோஷன் பாலிவுட் புறக்கணிப்புபேச்சு எல்லாம் படத்தை காப்பாற்ற வில்லை.கதை இருந்தால் தானே..அப்பாவின் ஆசையை அம்மா  உற்சாகமூட்டி மைக்டைசனை வீழ்த்துவதாகப் படம்  க்ளைமாக்ஸ்  செல்கிறது.  இன்றைய வசூல் நாளைக்கு இருக்குமா..?

Share via
Advertiment
Ads