Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காமெடி நடிகர் விவேக்கிற்கு பதில் யார்

by Editor

சினிமா
காமெடி நடிகர் விவேக்கிற்கு பதில் யார்

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விவேக்கின் மறைவிற்கு பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போவது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் விவேக்கின் கதாப்பாத்திரத்தில் 'இந்தியன்-2' படத்தில் நடிக்க ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர், பேட்ட, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share via
Advertiment
Ads