Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இணையவழியில் ஆன்மிக வகுப்பு!

by Editor

ஆன்மீகம்
இணையவழியில் ஆன்மிக வகுப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கு இணையவழியில் ஆன்மிக வகுப்பு இன்று தொடங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் இணைய வழியில் இன்று (ஜூன் 05) தொடங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமை வகித்து, வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் அருளாசி வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், வைணவ ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா, முனைவர் ஜெயவித்யா ஆகியோர், ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் விளக்கினர்.

இந்த இணையவழி வகுப்பில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்த ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரையில் நடைபெறும் என, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்தார்.

Share via
Advertiment

More Stories

Ads