Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வரலாறு படைக்கும் உண்டியல் வருமானம் இதுவரை ரூ. 610 கோடியை எட்டியது.

by Editor

ஆன்மீகம்
வரலாறு படைக்கும் உண்டியல் வருமானம் இதுவரை ரூ. 610 கோடியை எட்டியது.

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியதாக  திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.129.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி, ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இதுவரை 610 கோடியை எட்டியுள்ள உண்டியல் வருமானம்  இந்த ஆண்டு முடிவுக்குள்  ரூ.1500 கோடியை எட்டும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இது போக தங்கம், வெள்ளி, வைரம் என ஏராளமான காணிக்கைகள் குவிந்துவருகிறது.இவையனைத்தும் தனியாக திருப்பதி தேவஸ்தான கணக்கில் சேர்க்கப்படும்.

Share via
Advertiment

More Stories

Ads