Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பல்வேறு தோஷங்கள் தீர பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகளும் பரிகாரங்களும் செய்துபாருங்க

by Editor

ஆன்மீகம்
பல்வேறு தோஷங்கள் தீர  பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகளும் பரிகாரங்களும் செய்துபாருங்க

குலதெய்வம், பூர்வீகம் பற்றி தகவல் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6-7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ வேளைகளில் லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சரியாகிவிடும்.

அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை அன்று குளத்து மீன்களுக்கு பொரி போட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும்.

உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமையில் இருப்பவர்களுக்கு நொய் அரிசியில் சர்க்கரை கலந்து கொடுத்து வந்தால் பொருளாதார பிரச்சனை தீரும்.

தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடோடு இருக்கும் பிள்ளைகள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

Share via
Advertiment

More Stories

Ads