Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது

by Staff

விளையாட்டு
ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் 2-வது போட்டி நேற்று ஆம்ஸ்டெல்வின் நகரில் நடந்தது. டாஸ் ஜெயித்த நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 48.3 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. நெதர்லாந்து அணி பேட்டிங் முதல் 3 வீரர்களான விக்ரம்ஜித் சிங் 46 ரன்னும், மேக்ஸ் ஓடவுத் 51 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அக்கேல் ஹூசைன் 4 விக்கெட்டும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை இழந்து திணறியது.அந்த அணி 99 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் பிராண்டன் கிங்-கார்டி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். வெஸ்ட்இண்டீஸ் 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.கிங் 91 ரன்னுடனும், கார்டி 43 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டி தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

Share via
Advertiment
Ads