Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உப கோயில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

by Editor

ஆன்மீகம்
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உப கோயில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணைஆணையார்  முன்னிலையில்  இன்று இத்திருக்கோயில் மற்றும் 11 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. 

 இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள் திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள்,
மதுரை தெற்கு வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் எஸ்.பி.ஐ யில் பணியாற்றி ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உண்டியல் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள்.

உப கோயில்கள் தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் முக்தீஸ்வரர் திருக்கோயில் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி  திருக்கோயில், ஆகிய கோயில் உண்டியல் திறக்கப்பட்டு  எண்ணிக்கை செய்தனர் 

அதில் தொகை 72,50, 821 /- (ரூபாய் 72 லட்சத்து 50ஆயிரத்து 821மட்டும்) பலமாற்று பொன் இனங்கள் 453கிராம், வெள்ளி இனங்கள்  450 கிராம் மற்றும்   சிங்கப்பூர் மலேசியா மற்றும் இலங்கை போன்ற அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 139எண்ணம் வரப்பெற்றுள்ளது.என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads