Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதியில் அதிகரிக்கும் பகதர்கள் கூட்டம்-பொறுமையை கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

by Editor

ஆன்மீகம்
திருப்பதியில் அதிகரிக்கும் பகதர்கள் கூட்டம்-பொறுமையை கடைப்பிடிக்க  அதிகாரிகளுக்கு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்குநாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துவருகிறது.மேலும் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறைகாலமென்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.29ஆம் தேதி இரவு 7 மணியளவில் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள  லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் வரை ஆனதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து  தகவல் அறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியவில்லை. இப்பொது வரத்தொடங்கியுள்ளனர்.கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்  அவர்தெரிவித்தார்.
 

Share via
Advertiment

More Stories

Ads