Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்!

by Admin

சினிமா
டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்!

‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், தளபதி 65 போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே தெலுங்கில் ‘அஞ்ஞாதவாசி’, ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share via
Advertiment
Ads