Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர்

by Staff

சினிமா
ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர்

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்துள்ளவர் நாய்லா அல் காதிஜா. இவர் இயக்கிவரும் பாப் என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏஆர் ரகுமான் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் நாய்லா குறித்து இயக்குனர் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கூறிய போது, இயக்குனர் நாய்லா ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்றும் அவர் இயக்கிய படத்தின் சில காட்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் அதனால் இந்த படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டேன் என்னும் கூறியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share via
Advertiment
Ads