Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 புதிய விதிமுறைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு

by Editor

விளையாட்டு
   புதிய விதிமுறைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட   இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு

 

 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.

24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதன்படி வீரர்கள் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதில் 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும், உடற்தகுதிக்கு 20 சதவீதமும், தலைமைப்பண்பு, தொழில்துறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏற்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது நியாமன்ற, வெளிப்படைத்தன்மை இல்லாத ஒப்பந்தம். இதில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை. வீரர்களை துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் 3ம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads