Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

புதிய சாதனை படைத்துள்ள கேஜிஎஃப்-2 ட்ரெய்லர்

by Staff

சினிமா
புதிய சாதனை படைத்துள்ள கேஜிஎஃப்-2 ட்ரெய்லர்

இந்திய அளவில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எஃப். - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர், ஞாயிறன்று மாலை வெளியானது. அதிரடிக் காட்சிகள் கொண்ட அந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை வெளியான இந்திய திரைப்பட டிரைலர்களில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படம் என்ற  புதிய சாதனையை கே.ஜி.எஃப். - 2 நிகழ்த்தியுள்ளது.

Share via
Advertiment
Ads