Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இலவச ஆம்புலன்ஸ் சேவை - அதிரடியில் விஜய் மன்றம்!

by Admin

சினிமா
இலவச ஆம்புலன்ஸ் சேவை - அதிரடியில் விஜய் மன்றம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு  மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 கார்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.

Share via
Advertiment
Ads