Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்

by Admin

சினிமா
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்


சிலம்பரசனுடன் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ்த்தரையுலகிற்குள் அடி எடுத்து வைத்தவர் n.மஞ்சிமா மோகன்.இவர் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர்.எப்.ஐ.ஆர் படத்தில்  விஷ்ணு விஷாலுடன் தமிழில் நடித்துள்ள மஞ்சிமா கெளதம்கார்த்தியுடன்  முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்தார்.இதற்குப்பிறகு கெளதமும்     காதலிப்பதாக வதந்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. இந்நிலையில் மஞ்சிமாவின் பிறந்த நாள் வர  ...கெளதம்  வாழ்த்துச்சொல்ல, தேங்க்யூ ஜி.கே. என்று கேஷ்வலாக மஞ்சிமா  பதில் சொல்ல..  அதற்குப்பிறகு இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பரவி வர  ,மஞ்சிமா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கும் அவருக்கும் எந்தத்தொடர்புமில்லை   கெளதம்தான் இது போன்ற செய்தியை  பரப்புவதாகவும் தெரிவித்தார். எது எப்படியே ரசிகர்கள் கனவில் மண் விழவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்

Share via
Advertiment
Ads