Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் விஷால் 15கோடி வைப்பு நிதி வைக்க உயர்நீதீமன்றம் உத்தரவு

by Admin

சினிமா
நடிகர் விஷால் 15கோடி வைப்பு நிதி வைக்க உயர்நீதீமன்றம் உத்தரவு


லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில்..மூன்றுவாரங்களுக்குள் நடிகர் விஷால்15கோடி வைப்பு நிதி வைக்க கட்டிய ரசீதை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவு.
நடிகர் விஷால் 2016 ஆம் ஆண்டு 'மருது' படத்திற்காக கோபுரம் பிலிம்ஸின் அன்புச்செழியனிடம் ₹15 கோடி கடனைப் பெற்றிருந்தார். அவரால் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால் வட்டியுடன் சேர்த்து ₹21.29 கோடியாக உயர்ந்ததால், விஷாலின் கடனைத் தீர்க்க லைகா முன்வந்தது. 21.29 கோடி ரூபாயை அவர் தயாரிப்பு நிறுவனத்திற்கு 30% வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன். விஷால் திட்டமிட்டபடி திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், விஷால் 30.05 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது

Share via
Advertiment
Ads