Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

செல்வராகவானும் தனுஷ்ம் - ஷூட்டிங் ஸ்பாட்டில்

by Admin

சினிமா
செல்வராகவானும் தனுஷ்ம் - ஷூட்டிங் ஸ்பாட்டில்

செல்வராகவன் - தனுஷ் வெற்றிக்கூட்டணி ‘நானே வருவேன்’ படத்தில் ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தினை, தாணு தயாரிக்கிறார்.

 யுவன் ஷங்கர் ராஜா இசையமக்கிறார். கடந்த ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், செல்வராகவன் தனுஷுடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் இயக்குநர்-நடிகர் போலல்லாமல், தனது அண்ணனை அப்பாபோல் எண்ணிக்கொண்டு பாசமுடன் கழுத்தைக் கட்டி விளையாடும் தம்பியாய் குழந்தை முகத்துடன் காணப்படுகிறார் தனுஷ்.

இப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். அதனால், புகைப்படத்தில் தனுஷ் இன்னும் இளமையாக பள்ளி மாணவரைப் போல் காணப்படுவது படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்ற யூகத்தையும் கிளப்பியிருக்கிறது. கவனம் ஈர்க்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share via
Advertiment
Ads