Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்!

by Admin

சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்!

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார். 

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுதா கொங்கரா பிரபாஸுக்கு கதை சொன்னதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துப்போனதால் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Share via
Advertiment
Ads